புதிய விமானம் தாங்கி போர்க்கப்பலை ரஷியா; இந்தியாவிடம் 16-ந் தேதி ஒப்படைக்கிறது

Written by vinni   // November 4, 2013   //

0c39f4a5-eb5e-4f0a-bbab-0d57e947da90_S_secvpfரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலானரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய விமானம் தாங்கி போர்க்கப்பலை இந்தியாவிடம் ரஷியா வரும் 16-ந் தேதி ஒப்படைக்கிறது.

தற்போது இந்தியாவிடம் ‘ஐ.என்.எஸ். விராத்’ என்ற ஒரே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்தான் உள்ளது. இந்தக் கப்பல் இங்கிலாந்திடம் இருந்து வாங்கி இந்திய கடற்படையில் 1987-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இந்தக் கப்பலின் சேவையை இந்தியா 2018-ம் ஆண்டு வரை பயன்படுத்த உத்தேசித்துள்ளது.

கொச்சி கப்பல் கட்டும் துறையில் உள்நாட்டிலேயே ‘விக்ராந்த்’ என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்படுகிறது. இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து ஒரு விமானம்தாங்கி போர்க்கப்பல் வாங்க இந்தியா முடிவு எடுத்து ஒப்பந்தம் செய்தது.

இந்தப் போர்க்கப்பலின் விலை 2.33 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.14 ஆயிரம் கோடி) ஆகும். இதை எப்போது ஒப்படைப்பது என்பது தொடர்பாக நீண்ட காலமாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

இப்போது ரஷியா தனது ‘அட்மிரல் கோர்ஸ்கோவ்’ என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நாள் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி ரஷியா பயணம் மேற்கொள்கிறார். அப்போது (நவம்பர் 16-ந் தேதி) அவரிடம் அந்த விமானம் தாங்கி போர்க்கப்பலை ரஷியா ஒப்படைக்கிறது.

அதைப் பெற்று, ஏ.கே.அந்தோணி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார். இந்தப் புதிய போர்க்கப்பலுக்கு ‘ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையில் சேர்ப்பது சீனாவுக்கு வயிற்றெரிச்சலைக் கிளப்பும் என தகவல்கள் கூறுகின்றன.

சீனா தனது முதலாவது போர்க்கப்பலையே (லயனாங்) உக்ரைன் நாட்டிடம் இருந்து வாங்கி, சமீபத்தில்தான் முக்கியமான கடல் பரிசோதனைகளை முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. யா வரும் 16-ந் தேதி ஒப்படைக்கிறது.
புதிய விமானம் தாங்கி போர்க்கப்பலை இந்தியாவிடம் ரஷி
தற்போது இந்தியாவிடம் ‘ஐ.என்.எஸ். விராத்’ என்ற ஒரே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்தான் உள்ளது. இந்தக் கப்பல் இங்கிலாந்திடம் இருந்து வாங்கி இந்திய கடற்படையில் 1987-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இந்தக் கப்பலின் சேவையை இந்தியா 2018-ம் ஆண்டு வரை பயன்படுத்த உத்தேசித்துள்ளது.

கொச்சி கப்பல் கட்டும் துறையில் உள்நாட்டிலேயே ‘விக்ராந்த்’ என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்படுகிறது. இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து ஒரு விமானம்தாங்கி போர்க்கப்பல் வாங்க இந்தியா முடிவு எடுத்து ஒப்பந்தம் செய்தது.

இந்தப் போர்க்கப்பலின் விலை 2.33 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.14 ஆயிரம் கோடி) ஆகும். இதை எப்போது ஒப்படைப்பது என்பது தொடர்பாக நீண்ட காலமாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

இப்போது ரஷியா தனது ‘அட்மிரல் கோர்ஸ்கோவ்’ என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நாள் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி ரஷியா பயணம் மேற்கொள்கிறார். அப்போது (நவம்பர் 16-ந் தேதி) அவரிடம் அந்த விமானம் தாங்கி போர்க்கப்பலை ரஷியா ஒப்படைக்கிறது.

அதைப் பெற்று, ஏ.கே.அந்தோணி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார். இந்தப் புதிய போர்க்கப்பலுக்கு ‘ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையில் சேர்ப்பது சீனாவுக்கு வயிற்றெரிச்சலைக் கிளப்பும் என தகவல்கள் கூறுகின்றன.

சீனா தனது முதலாவது போர்க்கப்பலையே (லயனாங்) உக்ரைன் நாட்டிடம் இருந்து வாங்கி, சமீபத்தில்தான் முக்கியமான கடல் பரிசோதனைகளை முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar posts

Comments are closed.