எதிர்வரும் 15ஆம் திகதி முதல் யாழில் மாபெரும் அறவழிப் போராட்டம்

Written by vinni   // November 4, 2013   //

Tna Trinco1பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் யாழில் மாபெரும் அறவழிப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

வலி. வடக்கு காணி அபகரிப்பு மற்றும் வீடழிப்பு, இசைப்பிரியா, பாலச்சந்திரன் கொலைகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பாக கண்டனம் தெரிவித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த அறவழிப் போராட்டம் இடம்பெறவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களின் பல்வேறு பிரதேசங்களில் பல்வேறு வழிகளில் இந்த அறவழி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மேலும் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.