புலம்பெயர், தமிழ்நாட்டு மக்களுக்கும் கூட்டமைப்பு அழைப்பு : பொதுநலவாய மாநாட்டு காலத்தில் வடகிழக்கில் தொடர் போராட்டங்கள்

Written by vinni   // November 4, 2013   //

கொழும்பில் பொதுநலவாய உச்சிமாநாடு நடைபெறும் 15ம் திகதி முதல் 20ம் திகதி வரையான காலப்பகுதியில் வடகிழக்கில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

வடக்கு கிழக்கில் மாத்திரமல்ல புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் உள்ள தமிழர்களும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக மாபெரும் எழுர்ச்சி ஆர்ப்பாட்டங்களை நடாத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச போர்க்குற்ற விசாரணை, இன அழிப்பு, நிலஅபகரிப்பு, காணாமல்போனவர்களின் விடயங்கள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருபவர்களின் விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்களை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டங்கள் மேற்ககொள்ளப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நீர்வேலியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்,

முதலாவது போராட்டமானது யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 15ம் திகதி நடைபெறவுள்ளது. இதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இசைப்பிரியா இலங்கை இராணுவத்தினரால் கொலை செய்யப்படும் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. இதுவரையில் பல போர்க்குற்ற காணொளிகள் வெளியாகிய போதும் இதுவரையில் அவை உரிய வகையில் விசாரிக்கப்படவில்லை.

TNA-logoஎமது மக்கள் மீதும் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு உரிய விசாரணை உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்டவில்லை.

இதனை வலியுறுத்தி சர்வதேச விசாரணையைக் கோரும முகமாக இந்த ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக புலம் பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் அதேநாட்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

எமக்காக குரல் கொடுக்கும தமிழக மக்களுக்கும் எழுச்சியாக ஆர்ப்பாட்டங்களை தமிழகம் எங்கும் மேற்கொள்ள வேண்டும்.அதேபோல் வடக்கு கிழக்கில் ஒவ்வொரு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் பணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம், அ.பரஞ்சோதி, என்.சிவயோகன், பா.கஜதீபன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட பல முக்கியத்தர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.


Similar posts

Comments are closed.