சப்– இன்ஸ்பெக்டர் மீது கற்பழிப்பு புகார் கொடுத்த ஆசிரியை எரித்துக் கொலை

Written by vinni   // November 3, 2013   //

fire-366x275சப்– இன்ஸ்பெக்டர் மீது கற்பழிப்பு புகார் கொடுத்த ஆசிரியை எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் இடிஸ்ரி. ஆசிரியையான இவர் ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் டெலாங் என்ற இடத்துக்கு பயிற்சிக்காக வந்து இருந்தார். அங்குள்ள பள்ளியில் சேர்ந்து பணி புரிந்து வந்தார்.

இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சப்– இன்ஸ்பெக்டர் தண்டசேனா என்பவருக்கு ஆசிரியை மீது ஒரு கண் இருந்தது. இந்த நிலையில் அவர் பலவந்தமாக மானபங்கம் செய்து ஆசிரியை கற்பழித்துவிட்டார். தண்டசேனா ஏற்கனவே சஸ்பெண்டு ஆனவர்.

இதுபற்றி ஆசிரியை போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் கண்டு கொள்ளவில்லை. இதற்கிடையே தன் மீதான புகாரை வாபஸ் பெறுமாறு சப்– இன்ஸ்பெக்டர் மிரட்டல் விடுத்தார். அவரது மிரட்டலுக்கு பயப்படாத ஆசிரியை புகாரை வாபஸ் பெற மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சப்– இன்ஸ்பெக்டர் கூலிப்படையை ஏவி ஆசிரியை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக தனது ஆட்களை ஏற்பாடு செய்தார். அவர்கள் ஆசிரியை மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்தனர். இதில் 90 சதவீத தீக்காயம் அடைந்த அவர் விசாகப்பட்டினம் ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டார். அங்கு 5 நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

இந்த விவகாரம் பற்றி அறிந்த முதல்– மந்திரி நவீன் பட்நாயக் குற்றபிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆசிரியை புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் இன்ஸ் பெக்டர் சுஜித்கு மார்காய் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் முதல்– மந்திரி நவீன் பட்நாயக் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை விரைவு கோர்ட்டில் துரிதமாக நடத்தவும் உத்தவிடப்பட்டுள்ளது.

புகார் அளிக்கப்பட்ட சப்– இன்ஸ்பெக்டர் தண்ட சேனா தலைமறைவானார். ஆந்திரா– ஒடிசா எல்லையில் இச்சாபூர் என்ற இடத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். ஆசிரியை எரித்துக் கொன்ற கூலிப்படை கும்பலை தேடிவருகிறார்கள்.


Similar posts

Comments are closed.