குடிசைகளை எரித்த ராக்கெட் வெடிகள்

Written by vinni   // November 3, 2013   //

vediதீபாவளி என்றாலே இனிப்பு, புத்தாடைகளை விட பட்டாசுக்கு தான் முதலிடம்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விதவிதமான பட்டாசுகளை வெடித்து மகிழ்வார்கள்.

வெடிகளை வெடிக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும், இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரமாக தீவிர பிரசாரங்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

சென்னை முழுவதும் 60 தீயணைப்பு வண்டிகள், சுமார் 800 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

விபத்து ஏற்பட்டால் உடனுக்குடன் செல்வதற்கு வசதியாக முக்கிய இடங்களில் தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் நின்றன.

ராக்கெட் வெடிகள், வாணவெடிகளால் குடிசை வீடுகள், சிறு பேப்பர் குடோன்கள் எரிந்துள்ளன.

தீயணைப்பு துறைக்கு மொத்தம் 76 அழைப்புகள் வந்தன. அனைத்து அழைப்பின் பேரிலும் தீயணைப்பு வண்டிகள் உடனுக்குடன் சென்று தீயை அணைத்தனர்.

பெரும்பாலும் மாடிகள் மீது போடப்பட்டிருந்த ஓலை கொட்டகைகள்தான் எரிந்துள்ளன.

அயன்புரம் திருவள்ளுவர் நகரில் 2 குடிசைகள், ஓட்டேரி, காமராஜ் தெருவில் 2 குடிசைகள் எரிந்தன.

இதுதவிர வானகரம் பொன்னியம்மன் கோவில் தெரு, மணலி பாரதி நகர், ஈக்காடுதாங்கல் காந்திநகர், நொளம்பூர் மாதா கோவில் தெரு, கோடம்பாக்கம் கோவிந்தராஜா தெரு, சுப்பராய தெரு, குரோம் பேட்டை மும்மூர்த்திநகர், சேக்காடு பாலாஜி நகர், ஆவடி, காமராஜ் நகர் ஆகிய இடங்களில் மாடி மீது போடப்படிருந்த கீற்று கொட்டகைள் தீக்கிரையானது.

புளியந்தோப்பு, ஆழ்வார் திருநகர், இந்திரா நகர் ஆகிய இடங்களில் ராக்கெட் வெடிகள் விழுந்து தாக்கியதில் இரண்டு தென்னை மரங்கள் எரிந்தன.

பட்டாசு வெடித்ததில் தீக்காயம் அடைந்த 9 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தசரத்(வயது 12) என்ற சிறுவன் மட்டும் பலத்த தீக்காயம் காரணமாக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.


Similar posts

Comments are closed.