பொதுநலவாய ஆரம்ப நிகழ்வுக்கு மாத்திரம் 50 மில்லியன் ரூபாய் செலவு

Written by vinni   // November 3, 2013   //

commanகொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி பொதுநலவாய நாடுகளின் மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது 15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்ப நிகழ்வுக்கு மாத்திரம் இலங்கை அரசாங்கம் 50 மில்லியன் ரூபாய்களை செலவிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர, எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் பத்தரமுல்ல என்ற இடத்தில் நான்கு நாட்களாக களியாட்ட நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. இதற்கும் புறம்பாக 50 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் 2013 ஆம் ஆண்டின் பொதுநலவாய அமர்வு நிகழ்வுகள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பித்து 17 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. இதில் சுமார் 2000 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்தநிலையில் பொதுநலவாய நாடுகள் தொடர்பான இணையத்தளத்துக்கு மாத்திரம் 15 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அரசாங்கம் மறுத்துள்ளது.


Similar posts

Comments are closed.