வடக்கே செல்ல எந்த நாடும் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை

Written by vinni   // November 3, 2013   //

Karunatilaka-Amunugama0_eu010212_7f623கொமன்வெல்த் மாநாட்டுக்கு வரும் தமது நாட்டுக் குழுவினர், வடக்குப் பகுதிக்குச் செல்ல விரும்புவதாக இதுவரை எந்த நாடும் கோரிக்கை விடுக்கவில்லை என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம,

“கொமன்வெல்த் மாநாட்டுக்கு வரும் தமது நாட்டின் தலைவர் அல்லது உயர்நிலைப் பிரதிநிதிகள், வடபகுதிக்குச் செல்ல விரும்புவதாக எந்தவொரு நாடும் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை.

ஆனால் அவர்கள் அத்தகைய கோரிக்கையை முன்வைப்பார்களேயானால், அதற்கான வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்கத் தயார்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனும், நியுசிலாந்து வெளிவிவகார அமைச்சர் முரே மக்கெல்லியும், தாம் வடக்குப் பகுதிக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

எனினும் எப்போது என்ற விபரத்தை அவர்கள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.