தலைவரை கொன்றவர்களை பழிவாங்குவோம்

Written by vinni   // November 3, 2013   //

thalipanபாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியின பகுதியில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில், தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹக்கீமுல்லா மெஹ்சூத் கொல்லப்பட்டார்.
அவனுடன் அப்துல்லா, தாரிக் மெஹ்சூத் மற்றும் ஹக்கீமுல்லா மெஹ்சூத்தின் மெய்காப்பாளன் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

தங்கள் தலைவனை கொன்றதால் கடும் ஆத்திரமடைந்துள்ள தலிபான் இயக்கம், இதற்கு பழிவாங்குவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

“முன்னெப்போதும் இல்லாத வகையில் எங்கள் பழிவாங்கும் நடவடிக்கை இருக்கும். ஆளில்லா விமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு முழு உடந்தையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். எங்கள் எதிரியை எங்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று வடக்கு வசிரிஸ்தான் தலிபான் கமாண்டர் அபு ஓமர் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.