கனடாவில் டிஜிட்டல் கரன்சிக்கான ஏ.டி.எம். மையம் ஆரம்பம்

Written by vinni   // November 3, 2013   //

atmஉலகின் முதலாவது டிஜிட்டல் கரன்சிக்கான ஏ.டி.எம். மையம் கனடாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கரன்சி என்பது, நாம் செலுத்தும் பணத்தின் மதிப்பிற்கேற்ப ஒரு ஏ.டி.எம். அட்டை வெளிவரும் அதன் மதிப்பைக் கூட்ட, பணத்தை மீண்டும் செலுத்துவதன் மூலம் அட்டையை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள், தங்களுடைய ஸ்மார்ட் போன் மூலமும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

கடந்த 2009ல் சடோஷி நாகாமோட்டோ என்பவரால், “பிட்காயின்’ எனப்படும் டிஜிட்டல் கரன்சி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அதிகாரப்பூர்வ ஏ.டி.எம். மையம், கனடா தலைநகர் வான்கூவரில் உள்ள ஒரு காபி ஷாப்பில் துவக்கப்பட்டுள்ளது.

இந்த ஏ.டி.எம். இயந்திரத்தில், உள்ளூர் பணத்தை செலுத்தினால், அதன் மதிப்பிற்கு ஏற்ற டிஜிட்டல் கரன்சி வெளிவரும். கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அட்டையைக் கொண்டு உள்ளூரில், காபி முதல் நிலம் வாங்குவது வரையிலான, 15 வர்த்தகங்களை செய்ய முடியும்.

கனடாவில், நான்கு இடங்களில் துவக்கப்பட்ட ஏ.டி.எம்., மையங்களில் அதன் செயல்பாட்டை அறிந்து கொள்ளவும், தங்களுடைய பணத்தை மாற்றிக் கொள்ளவும், உள்ளூர் மக்கள் குவிந்தனர்.

அமெரிக்கா, ஜெர்மனி, அர்ஜென்டினா போன்ற நாடுகளில் இந்த டிஜிட்டல் கரன்சியைக் கொண்டு, “வேர்டுபிரஸ்’ உள்ளிட்ட இணையதள நிறுவனங்களில் பொருட்களை வாங்கவும், விற்கவும் முடியும்.

இந்த பண பரிவர்த்தனைக்கு, வாடிக்கையாளர்கள், தங்கள் உள்ளங்கையை ஏ.டி.எம். இயந்திரத்தில் வைத்து, ஸ்கேன் செய்ய வேண்டும். ஏ.டி.எம்., கார்டு இல்லாதவர்களும், இந்த டிஜிட்டல் கரன்சியை வைத்து பணத்தை பெறுவதற்கும், செலுத்துவதற்கும் பயன்படுத்த முடியும்.

வான்கூவரிலுள்ள பிட்காயினெக்ஸ் நிறுவனமும், நெவாடாவில் உள்ள “ரோபோகாயின்’ நிறுவனமும் இந்த ஏ.டி.எம். மையங்களை நிர்வகிக்கின்றன.


Similar posts

Comments are closed.