அதிமுக உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது ஊடுறுவல்

Written by vinni   // November 3, 2013   //

jayalalithaஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உத்தியோகபூர்வ இணையளத்தளம் மீது ஊடுறுவல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளம் பாகிஸ்தானிலிருந்து செயற்படும் குழு ஒன்றினால் ஊடுறுவப்பட்டு தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்டை ஓட்டின் படம் ஒன்றை இணையத்தளத்தில் பொறித்துள்ளதுடன் பாகிஸ்தானின் தேசியக் கொடியையும் இணைத்துள்ளனர்.

அத்துடன் பாகிஸ்தானுடன் சம்பந்தப்பட்ட சில வாசகங்களையும் அதில் இணைத்துக்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக இணையத்தளத்தின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் தமிழகத்தின் முக்கிய கட்சிகளுள் ஒன்றான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், முதலமைச்சர் ஜெயலலிதாவின் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.