சஹாரா பாலைவனத்தில் 92 பேர் இறப்பு : அகதிகள் முகாமை மூட நைகர் அரசு உத்தரவு

Written by vinni   // November 3, 2013   //

photo_verybig_101947மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் வறுமையில் வாடும் மக்கள் ஆண்டுதோறும் மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபுக எண்ணி தங்கள் பயணத்தை மேற்கொள்ளுகின்றனர். இந்தப் பயணத்தில் இவர்கள் வடக்கு நைகர் பகுதி அமைந்துள்ள சஹாரா பாலைவனத்தைக் கடந்து அல்ஜீரியா அல்லது லிபியா நாட்டை அடைந்து அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவேண்டும்.

இவ்வாறு இரண்டு லாரிகளில் கடந்த அக்டோபர் மாதம் நூற்றுக்கணக்கான மக்கள் சஹாரா பாலைவனத்தைக் கடந்து செல்ல முற்பட்டுள்ளனர். அந்த முயற்சியில் இவர்கள் சென்ற லாரிகள் பழுதடைந்து வழியில் நின்றுவிட்டதால் பாலைவனத்தில் இறங்கி நடக்க முற்பட்ட மக்கள் வழியிலேயே தண்ணீர் வறட்சியினால் இறக்க நேரிட்டது.

இவ்வாறு இறந்து சிதைந்து கிடந்த 52 குழந்தைகள், 33 பெண்கள் மற்றும் 7 ஆண்களின் உடல்களை கடந்த புதன்கிழமை அன்று நைகர் அரசு கண்டுபிடித்தது. இதன் விளைவாக வடக்கு நைஜீரியாவின் அகடெஸ் நகரில் உள்ள கெட்டோஸ் எனப்படும் அகதிகள் முகாமை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.

மனிதக் கடத்தலில் ஈடுபடும் வலைத்தளங்களின் குற்றவியல் நடவடிக்கைகளே இந்தத் துயர சம்பவத்திற்குக் காரணம் என்று அறிவித்துள்ள அரசு இதற்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவிப்பு செய்துள்ளது.

நைகரின் வடக்குப் பகுதியில் இருந்த வந்த பெண் ஒருவரே இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் என்று தெரிய வந்ததை முன்னிட்டு பாலைவன நகரமான தமன்ரசெட்டில் கைது செய்யப்பட்ட அவர் போலீஸ் காவலில் உள்ளார்.

நைகரின் தெற்குப் பகுதியில் உள்ள கன்ட்சே மாவட்டத்திலிருந்து வந்தவர்களில் பெரும்பான்மையானோர் இறந்துள்ளனர். எனவே அந்நாட்டின் பிரதமரான பிரிகி ரபினி அம்மாவட்டத்திற்கு சென்று இந்தத் துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் சார்பாக வருத்தத்தைத் தெரிவிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று நாட்களுக்கு அரசு துக்கம் அனுஷ்டிக்கும் என்றும் அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.