பொதுநலவாய மாநாட்டினை புறக்கணிக்க கோரி லண்டனில் பேரணி

Written by vinni   // November 3, 2013   //

uk-protest_CIஇலங்கையில் நடைபெற இருக்கும் பொதுநலவாய மாநாட்டினை புறக்கணிக்க கோரி நேற்று மாலை லண்டனில் 4 மணி முதல் 7 மணி வரை பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது. இப்பேரணி Embankment நிலக்கீழ் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பித்து 10 Downing Street முன்பாக நிறைவடைந்தது.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன் மற்றும் இளவரசர் சார்ள்ஸ் மாநாட்டினை புறக்கணிக்க கோரி மக்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் பிரித்தானிய பிரதமரின் இலங்கை பயணத்தை நிறுத்த வேண்டும் பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு நீதி வேண்டும் என்றமுக்கிய விடயங்களை மையப்படுத்தி கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் கலந்து கொண்டனர்.

பொதுநலவாய மாநாட்டின் கொள்கைகளுக்கு எதிரான வகையில் சிறிலங்காவில் நடாத்தப்பட இருக்கின்ற மாநாட்டினை நடாத்துவது, மற்றும் அதில் கலந்து கொள்வது என்ற பிரித்தானிய பிரதமர், இளவரசர் சார்ள்ஸின் முடிவினை மாற்ற வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்பேரணியில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.


Similar posts

Comments are closed.