பூமியை போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு

Written by vinni   // November 2, 2013   //

kepler_002விண்வெளியில் பூமியை போன்ற புதிய கிரகத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
விண்வெளியில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா மையம் கெப்ளர் விண்கலத்தை அனுப்பி உள்ளது.

அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்புகிறது.

அந்த வகையில் தற்போது ஒரு புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரகத்திற்கு கெப்ளர்-78 பி என பெயரிடப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து 700 ஒளிஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கிரகம், பூமியை போன்றே வடிவமைப்பு உடையது தனிசிறப்பாகும்.

இங்கு பாறைகள் நிறைந்துள்ளதால், இரும்பு தாது அதிகளவில் இருக்கும் என நம்பப்படுகிறது.

இது பூமியை விட 1.2 மடங்கு பெரியதும், 1.7 மடங்கு கூடுதல் எடை கொண்டதும் ஆகும்.

பூமியை விட 2 ஆயிரம் டிகிரி செல்சியஸ் அதிக வெப்பத்துடன் இருப்பதால், எந்த உயிரினமும் வாழ முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.