தீய சக்தியை நன்மைகள் அழித்தமையே தீபாவளியின் கருப்பொருளாகும்

Written by vinni   // November 2, 2013   //

mahinda_rajapaksaதீய சக்தியை அழித்து நன்மை வெற்றியீட்டியமையே தீபத் திருநாளின் கருப்பொருளாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இருள் அகன்று தீப ஒளி படர்ந்து அனைவருக்கும் நன்மை ஏற்பட இந்தத் தீபாவளித் திருநாள் வழியமைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து இன மக்களிடையே நல்லிணக்கமும் ஒற்றுமையும், சுபீட்சமும் ஏற்பட திடசங்கற்பம் பூணுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தசாப்த கால யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டுள்ள நிலையில் பேதங்களை களைந்து அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து இந்து சகோதரர்களுக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.