ஒட்டுக் கேட்டது உண்மை தான்! ஜான் கெர்ரி

Written by vinni   // November 2, 2013   //

amaricaஅமெரிக்க உளவுத்துறை ஒரு சில அழைப்புகளை மிக தீவிரமாக கண்காணித்தது உண்மை தான் என அமெரிக்க வெளிவிவாகரத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.
லண்டனில் திறந்தவெளி அரசு பங்களிப்பு குறித்த வருடாந்திர மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், அமெரிக்காவின் ஒட்டு கேட்கும் நடவடிக்கையில் அப்பாவி பொதுமக்களை ஒருபோதும் கஷ்டப்படுத்தியது இல்லை என்பதை உறுதியாக என்னால் கூற முடியும்.

எனினும் ஒரு சில விஷயங்களை சேகரிப்பதற்காக சில நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டது உண்மை. இதற்காக சில அழைப்புகளை நாங்கள் மிகத் தீவிரமாக கண்காணித்தது உண்மை.

இந்த ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக எங்களது ஜனாதிபதி நிலையை தெளிவுபடுத்தி உள்ளார்.

யாரும் கஷ்டப்படக்கூடாது என்ற அடிப்படையில், ஒட்டுகேட்பு நடவடிக்கையை சீராய்வு செய்து வருகிறோம்.

சுமார் 7 கோடி மக்களின் தொலைபேசி அழைப்புகளை, அமெரிக்க உளவுத்துறை ஒட்டுகேட்டது என்ற செய்தி உண்மை இல்லை.

நாளுக்கு நாள் இதுபோன்ற செய்திகள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன, இதில் எந்த உண்மையும் இல்லை என்பது தான் நிஜம்.

எங்கள் நாட்டிற்கும் இருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்காக அங்கொன்றும், இங்கொன்றுமாக அவ்வப்போது தொலைபேசி அழைப்புகளை ஒட்டுகேட்பது வழக்கம்தான்.

ஆனால் இந்த எண்ணிக்கை மிகவும் பெரிதுபடுத்தி கூறப்படுகிறது. இதில் ஒரு விஷயம் என்னவென்றால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த ஒட்டுகேட்பு விவகாரத்தினால்தான் பல்வேறு தீவிரவாத சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளது என்பதுதான்.

மேலே பறக்கும் விமானங்கள் கீழே இறங்கி வரக்கூடாது என்பதற்காகவும், கட்டிடங்கள் வெடித்து சிதறிவிடக்கூடாது என்பதற்காகவும், பொதுமக்கள் படுகொலைகளுக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காகவும் தான் நாங்கள் ஒட்டுகேட்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

 


Similar posts

Comments are closed.