லா லிகா காற்பந்து தொடர்: அத்லெட்டிகோ மாட்ரிட் வெற்றி

Written by vinni   // November 2, 2013   //

17-football-12-300கிரானடா அணிக்கு எதிரான லா லிகா கால்பந்து லீக் போட்டியில் அத்லெட்டிகோ மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.
ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் கிரானடா, அத்லெட்டிகோ மாட்ரிட் அணிகள் மோதின.

இதன் முதல் பாதியில் அத்லெட்டிகோ அணியின் தியாகோ (38வது நிமிடம்) பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்க மாற்றினார். இதற்கு கிரானடா அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இரண்டாவது பாதியில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை அத்லெட்டிகோ அணியின் டேவிட் வில்லா (78வது நிமிடம்) கோலாக மாற்றி கைகொடுத்தார்.

போட்டியின் கடைசி நேரத்தில் கிரானடா அணியின் ஓடியன் (90வது நிமிடம்) ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார். முடிவில், அத்லெட்டிகோ மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம், புள்ளிப்பட்டியலில் அத்தெலட்டிகோ (30) அணி தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. முதல் இடத்தில் பார்சிலோனா அணி (31) உள்ளது. மூன்றாவது இடத்தை ரியல் மாட்ரிட் அணி (25) தக்க வைத்துக் கொண்டது.


Similar posts

Comments are closed.