கற்பழித்து புதைக்கப்பட்ட சிறுமி உயிருடன் வந்த அதிசயம்

Written by vinni   // November 2, 2013   //

pakiபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தோபா தேக் சிங் என்ற இடத்தில் கடந்த வாரம் தனியாக சென்ற 13 வயது சிறுமியை வழிமறித்த 2 பேரினால் கற்பழிக்கப்பட்டார்.
அந்த சிறுமியை உயிருடன் விட்டால் விஷயம் வெளியே தெரிந்து ஆபத்தாகி விடும் என நினைத்து இருவரும் சேர்ந்து ஒரு குழியை தோண்டி மயங்கிய நிலையில் இருந்த சிறுமியைய உயிருடன் புதைத்தனர்.

மயக்கம் தெளிந்த சிறுமி, தான் மண்ணுக்குள் புதைக்கப்பட்டதை அறிந்து, முட்டி மோதி மண்ணை தள்ளி புதைகுழியில் இருந்து மீண்டு வந்தாள்.

அவ்வழியாக வந்த சிலர் அவளது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர்.

இந்த கொடிய சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரை ஏற்றுக் கொள்ள பொலிஸார் மறுத்து விட்டனர்.

இதனையடுத்து, லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதியின் தனிப்பிரிவில் அவர் புகார் அளித்தார். அதன் பின்னர், நீதிபதியின் உத்தரவையடுத்து அந்த சிறுமியை கற்பழித்து உயிருடன் புதைத்த 2 குற்றவாளிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்


Similar posts

Comments are closed.