இராணுவத்தை வெளியேற்றுமாறு மாகாண சபையினால் கோரிக்கை விடுக்க முடியாது

Written by vinni   // November 1, 2013   //

army 01வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்­று­மாறு வட மாகாண சபை­யினால் கோரிக்கை விடுக்க முடி­யாது. அது மாகாண சபை விட­ய­தா­னத்­துக்கு அப்­பாற்­பட்­டது. மாகாண சபை விட­ய­தானம் என்ன என்­ப­தைக்­கூட கூட்­ட­மைப்­பினால் புரிந்­து­கொள்ள முடி­யாமல் உள்­ளது என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் பிர­தி­ச் செயலாளரும் மேல் மாகாண அமைச்­ச­ரு­மான உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.

இரா­ணுவம் எங்கு இருக்­க­வேண்டும் என்­ப­தனை நாட்டின் ஜனா­தி­பதி என்ற வகையில் ஜனா­தி­ப­தியே தீர்­மா­னிப்பார். அதில் எவரும் தலை­யிட முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.
வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை அகற்­று­வது அர­சாங்­கத்தின் கடமை என்று வட மாகாண சபை முத­ல­மைச்சர் ஓய்­வு­பெற்ற நீதி­ய­ரசர் விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­தி­ருந்­தமை குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

உதய கம்­மன்­பில இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்
வட மாகாண சபையை கைப்­பற்­றி­யுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இவ்­வா­றான கோரிக்­கை­களை முன்­வைக்கும் என்­பது எமக்குத் தெரியும். என­வேதான் வடக்குத் தேர்­த­லுக்கு முன்­ன­தாக 13 ஆவது திருத்தச் சட்­டத்தின் சில அதி­கா­ரங்­களை நீக்­கு­மாறு வலி­யு­றுத்­தி­வந்தோம்.

எவ்­வா­றெ­னினும் தற்­போ­தைய நிலை­மையில் கூட்­ட­மைப்­பினர் 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் உள்ள அதி­கா­ரங்­களை உட­ன­டி­யாக கோர மாட்­டார்கள். மாறாக மத்­திய அர­சாங்கம் எப்­போது மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்தை இழக்­கின்­றதோ அன்று கூட்­ட­மைப்­பினர் தமது வேலையை செய்ய ஆரம்­பித்­து­வி­டு­வார்கள்.
அந்த நேரத்தில் 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் மாற்­றங்­களை செய்­யக்­கூ­டிய நிலையில் மத்­திய அர­சாங்கம் இருக்­காது. அந்த நேரத்தில் எல்­லாமே கால தாம­த­மா­கி­யி­ருக்கும். அந்த நேரத்தில் சிந்­திப்­பதில் பலன் இருக்­காது. இதனை அர­சாங்கம் தற்­போதே உணர்ந்­து­கொள்­ள­வேண்டும்.

இதே­வேளை 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் இல்­லாத விட­ய­தா­னத்­துக்கு அப்­பாற்­பட்ட விட­யங்­க­ளையே வட மாகாண முத­ல­மைச்சர் தனது முதல் உரையில் கூறி­யுள்ளார். அதா­வது வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்­று­மாறு வட மாகாண சபை­யினால் கோரிக்கை விடுக்க முடி­யாது. அது மாகாண சபை விட­ய­தா­னத்­துக்கு அப்­பாற்­பட்­டது.
இரா­ணுவம் எங்கு இருக்­க­வேண்டும் என்­ப­தனை நாட்டின் ஜனா­தி­பதி என்ற வகையில் ஜனா­தி­ப­தியே தீர்­மா­னிப்பார். அதில் எவரும் தலை­யிட முடி­யாது. இது மாகாண சபை­யுடன் தொடர்­பு­றாத விடயம்.

இந்­நி­லையில் மாகாண சபை விட­ய­தானம் என்ன என்­ப­தைக்­கூட கூட்­ட­மைப்­பினால் புரிந்­து­கொள்ள முடி­யாமல் உள்­ளது. முன்னாள் நீதி­ய­ரசர் ஒருவர் முத­ல­மைச்­ச­ரா­கியும் மாகாண சபை விட­ய­தா­னத்­துக்கு உட்­பட்ட விட­யங்கள் எவை என்­பது குறித்து தெரி­யாமல் இருக்­கின்­றார்.

இது இவ்­வாறு இருக்க மாகாண சபைக்­கு­ரிய ஆளு­நரை நிய­மிப்­பது ஜனா­தி­ப­தி­யாகும். ஜனா­தி­ப­தியின் பிர­தி­நி­தி­யா­கவே ஆளுநர் நிய­மிக்­கப்­ப­டு­கின்றார். ஜனா­தி­பதி தனக்கு தேவை­யா­ன­வ­ரையே வட மாகாண சபையின் ஆளுந­ராக நிய­மிப்பார்.
ஆளுநரை விலக்கவேண்டுமாயின் அதற் கென அரசியலமைப்பில் ஒரு முறைமை காணப்படுகின்றது. அதனை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம். அதனைவிடுத்து ஆளுநரை விலக்கவேண்டும் என்று கோருவதில் அர்த்தம் இல்லை. சட்டம் தெரிந்தவர்கள் வடக்கு மாகாண சபை க்கு நியமிக்கப்பட்டும் இந்த விடயம் தெரி யாமல் உள்ளனர்.


Similar posts

Comments are closed.