மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணம் வருமாறு விக்கினேஸ்வரன் அழைப்பு

Written by vinni   // November 1, 2013   //

vikneswaranகொழும்பில் நடை­பெ­ற­வுள்ள பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாட்டில் இந்­தியப் பிர­தமர் மன்­மோகன் சிங் கலந்து கொள்­வாரா அல்­லது இல்­லையா என்­பது குறித்த தீர்­மா­ன­மொன்று எடுக்­கப்­பட வேண்­டி­யுள்ள அதே­வே­ளையில், இலங்­கையின் வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்கி­னேஸ்­வரன் யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­யு­மாறு மன்­மோகன் சிங்­கிற்கு அழைப்பு விடுத்­துள்­ள­தாக ‘‘த ஹிந்து’’ ஆங்­கில நாளிதழ் தெரி­வித்­துள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பின் பதின்­மூன்­றா­வது திருத்தச் சட்­டத்தின் கீழ் வட மாகாண சபைத் தேர்­தலை நடத்தி முடிக்­கு­மாறு இலங்கை அர­சுக்கு கார­ணங்­காட்டி அறி­வு­றுத்­தி­ய­மைக்கு பிர­த­ம­ருக்கு நன்றி தெரி­வித்து கடந்த திங்­க­ளன்று அனுப்பி வைத்­துள்ள செய்­தி­யொன்­றி­லேயே விக்­கினேஸ்­வரன் இவ்­வாறு அழைப்பு விடுத்­துள்ளார். அந்தச் செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, பெரும் எண்­ணிக்­கை­யி­லான அப்­பாவிப் பொது­மக்­களை படு­மோ­ச­மான முறையில் பாதிக்கச் செய்­தி­ருந்த இலங்கை ஆயு­தப்­ப­டை­யி­ன­ருக்கும் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்­கு­மி­டையே இடம்­பெற்­றி­ருந்த பயங்­க­ர­மான யுத்­தங்­களின் குவிய மைய­மாகத் திகழ்ந்து வரும் மாகா­ணத்தில் நடை­பெற்ற தேர்­தல்­களில் தான் அறுதிப் பெரும்­பான்மை வாக்­கு­களால் வெற்­றி­வாகை சூடி­யி­ருந்­த­தா­கவும் அழுத்தி உரைத்­துள்ளார்.

அடிப்­படை ரீதியில் நோக்கும் போது முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன் பிர­தமர் சிங் கொழும்­பிலும் யாழ்ப்­பா­ணத்­திலும் தனது கவ­னத்தை ஊன்றிச் செலுத்த வேண்­டு­மென்றே விரும்­பு­கின்றார். அத்­துடன் தேசிய நல்­லி­ணக்க அர­சியல் அதி­காரப் பொறுப்பு மாற்றல் மற்றும் இடம்­பெ­யர்ந்­தோரை மீளக்­கு­டி­ய­மர்த்தல் போன்ற தங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் வாய்ந்த விவ­கா­ரங்­களில் இந்­தியா தொடர்ந்தும் ஈடு­பாடு காட்ட வேண்­டு­மென இலங்கை வாழ் தமிழ் சமூ­கத்­தினர் விரும்­பு­வ­தையும் இது எடுத்­துக்­காட்­டு­வ­தா­கவே உள்­ள­தென இந்த மாத முற்­ப­கு­தியில் வெளி­வி­வ­கார அமைச்சர் சல்மான் குர்ஷித் யாழ்ப்­பா­ணத்தில் விக்கி­னேஸ்­வ­ரனை நேரில் சந்­தித்து உரை­யா­டினார்.

அதனைத் தொடர்ந்து விக்கி­னேஸ்­வரன் பிர­த­ம­ருக்கு கடந்த திங்­க­ளன்று நன்றி நவிலல் கடி­தத்தை அனுப்­பி­யுள்­ளமை குறித்து உத்­தி­யோ­க­பூர்வ வட்­டா­ரங்கள் கருத்து வெளி­யிட்­டுள்­ளன.
வட மாகா­ணத்­திற்கு கூடு­த­லான சுயாட்சி உரி­மையை வழங்­கு­மாறு கொழும்­புக்குத் தூண்­டுதல் கொடுக்க மேலும் முனைந்து வரும் புது­டில்லி அங்கு புனர்­வாழ்வு மற்றும் மீள்­கு­டி­யேற்ற வேலைத்­திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. நடந்து முடிந்­துள்ள யுத்­தத்தின் போது இலங்கை அர­சினால் புரி­யப்­பட்­ட­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல் சம்­ப­வங்கள் மற்றும் தமி­ழக மீன­வர்கள் முகம் கொடுத்து வரும் பிரச்­சி­னைகள் ஆகி­ய­வற்றைக் கவ­னத்திற் கொண்டு தமி­ழக சட்டப் பேரவை கொழும்பில் நடை­பெ­ற­வுள்ள பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாட்டை இந்­தியா முற்று முழு­தா­கவே புறக்­க­ணிக்க வேண்­டு­மென ஏக­ம­ன­தான தீர்­மா­ன­மொன்றை அண்­மையில் நிறைவேற்றியிருந்தது.

இத்­த­கைய தீர்­மா­னத்­திற்கு எதி­ராக அண்­மையில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த அமைச்சர் குர்ஷித், இலங்­கையின் கவ­னத்தை ஈர்க்கும் வகையில் இந்­தியா செயற்­ப­டா­விடின் அது இழப்­பையே சந்­திக்­கு­மெனக் கூறி­யி­ருந்தார்.

இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சின் அதி­கா­ரி­களும் அவ­ரது கூற்­றினை வழி­மொ­ழிந்தே கருத்து தெரி­வித்­துள்­ளனர். உணர்­வு­க­ளுக்கு இடம்­கொ­டுத்து இலங்­கை­யு­ட­னான நல்­லு­றவை முறித்துக் கொள்வது சரியானதல்ல. பிராந்தியத்திலான இந்தியாவின் தந்திரோபாயம், பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் மேற்படி பொதுநலவாய மாநாட்டில் பங்கே ற்காமல் இருப்பதன் மூலம் இந்தியா ஏனையோருக்கு தனது இடத்தை தரை வார்த்துக் கொடுக்கக்கூடாதெனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கது.


Similar posts

Comments are closed.