கிணற்றை சுத்தம் செய்த போது நடந்த விபரீதம்

Written by vinni   // November 1, 2013   //

wellஆழ்துளை கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியர்கள் 4 பேர் பரிதாபமாக பலியாயினர்.
அரபு நாடான கத்தார் தலைநகர் டோகாவில் நேற்று ஆழ்துளை கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் நான்கு பேர் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது, இதில் 4 பேரும் பரிதாபமாக பலியாயினர்.

பொலிசார் நடத்திய விசாரணையில், கேரள மாநிலத்தை சேர்ந்த இசாக்(வயது 26), பாசில்(வயது 30), முனீர்(வயது 20) மற்றும் முகம்மது ஆகியோர் என தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் அந்நாட்டில் உள்ள தனியார் நிறுவன காண்டிராக்ட் அடிப்படையில் வேலை பார்த்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.