அமெரிக்கா- ஜேர்மன் பேச்சுவார்த்தை : ஒட்டுக் கேட்பு விவகாரம்

Written by vinni   // November 1, 2013   //

germanஜேர்மன் பிரதமரின் தொலைபேசி தகவல்களை ஒட்டுக் கேட்டது தொடர்பாக அமெரிக்கா- ஜேர்மன் நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
உலகில் 35 நாடுகளின் ரகசியங்களை அமெரிக்க உளவுத் துறை ஒட்டுக் கேட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் தொலைபேசி உரையாடல்களை கடந்த 10 ஆண்டுகளாக ஒட்டுக் கேட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இருநாடுகளின் உறவில் விரிசில் ஆரம்பித்தது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இடையே ஏற்பட்ட உடன்பாட்டினை அடுத்து இந்த பேச்சுக்கள் நடக்க உள்ளன.

பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக மெர்கலின் வெளியுறவு ஆலோசகர் Christoph Heusgen மற்றும் ஜேர்மன் ரகசிய புலானய்வு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் Guneter Heiss ஆகியோர் வாஷிங்டன் வந்துள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Susan Rice, தேசிய பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் James Clapper ஆகியோர் பங்கேற்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.