ஜப்பானுக்கு சீனா கடும் கண்டனம்

Written by vinni   // November 1, 2013   //

Flag of the People's Republic of Chinaகடற்படை இராணுவ பயிற்சியின் போது ஜப்பான் போர் கப்பல் இடையூறு செய்ததாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது.
மேற்கு பசிபிக் பெருங்கடலின் திறந்த கடற்பரப்பில் சீன கடற்படை அக்டோபர் 24ம் திகதி முதல் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

நவம்பர் 1ம் திகதி வரை திட்டமிடப்பட்டிருந்த இந்த பயிற்சியில் துப்பாக்கி சுடுதல், வெளிநாட்டு கப்பல்கள் மீதான கவனம் செலுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் சமீபத்தில் ஜப்பானின் போர் கப்பல் ஒன்று சீன ராணுவ பயிற்சி பகுதியில் அத்து மீறி நுழைந்து இடையூறு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் ஜப்பான் நாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக, இவ்வமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் யாங் யூஜுன் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.