காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து உறுதியான முடிவு இல்லை

Written by vinni   // November 1, 2013   //

india flagகாமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக பிரதமர் தரப்பில் இருந்து இன்னும் உறுதியான முடிவு வெளியாகவில்லை.

ஆனாலும், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமரை பங்கேற்கச் செய்வதில் இலங்கை அரசு முனைப்புடன் இருக்கிறது.

புறக்கணிப்பு முடிவை உடனே அறிவிக்குமாறு தமிழக கட்சிகள் நெருக்கடி கொடுக்கும் நிலையில், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

தேச நலன், சர்வதேச சமூகத்திற்கு இந்தியா ஆற்ற வேண்டிய கடமைகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் டெல்லிக்கு இன்று விஜயம் செய்யும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.