உலகிலேயே பிரமாண்டமான சிலை குஜராத்தில்! அடிக்கல் நாட்டினர்

Written by vinni   // November 1, 2013   //

statue_002உலகிலேயே பிரமாண்டமான சிலையாக வடிவமைக்கப்படவுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அத்வானி முன்னிலையில் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணைப் பகுதியில் 182 மீட்டர் உயரத்தில் பிரமாண்டமாக சிலை அமைக்கப்படவுள்ளது.

இந்த சிலை நியூயார்க் நகரில் உள்ள சுதந்திரதேவி சிலையை விட இரண்டு மடங்கு பெரியதானது.

சுமார் 2 ஆயிரத்து 74 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படவுள்ள இந்த சிலையை பாதம் முதல் உச்சி வரை சென்று பார்வையிடலாம்.

வருங்காலத்தில் இந்தியாவில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக இந்த சிலை உருவாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதுவரையிலும் இந்தியாவில் பாட்னா நகரில் உள்ள 70 அடி உயர மகாத்மா காந்தி சிலைதான் உயரமான சிலையாக கருதப்பட்டு வருகிறது.


Similar posts

Comments are closed.