பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்: விக்ரமபாகு கருணாரட்ன

Written by vinni   // November 1, 2013   //

commanகொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டுக்கு முன்தினம் மெழுகுவர்த்தி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு 7 இல் உள்ள சுதந்திர சதுக்கத்தில் மாலையில் இந்த மெழுகுவர்த்தி ஏற்றும் போராட்டம் நடைபெறவுள்ளதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெழுகுவர்த்திகள் கொளுத்தப்படும்.

இதனை தவிர அன்றைய தினம் கொழும்பு கோட்டையில் மாற்று மாநாடு ஒன்று நடத்தப்படும். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு எமது கட்சி உட்பட புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஐக்கிய சக்தி அமைப்பு என்பன கடும் எதிர்ப்புகளை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளன.

இலங்கை தலைவர்கள் தமது நற்பெயரை அதிகரித்து கொள்ளும் நோக்கில் 1940 பில்லியன் ரூபா செலவு செய்து இந்த மாநாட்டை நடத்துகின்றனர்.

அரச நிறுவனங்களின் அன்றாட செலவுகளுக்கு தேவையான பணம் கூட இல்லாத சூழ்நிலையில் தனி நபர் ஒருவரின் புகழை அதிகரித்து கொள்ளும் நோக்கில் இப்படியான மாநாட்டை நடத்துவது தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் பாரிய எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.


Similar posts

Comments are closed.