முதலமைச்சர் விக்னேஸ்வரன் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்

Written by vinni   // October 31, 2013   //

Digital Cameraயாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை நண்பகல் வீடு திரும்பியுள்ளதாக முதலமைச்சர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

24  மணித்தியால இதயத்துடிப்பு பரிசோதனைக்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை 12.00 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலமைச்சரின் மருத்துவ பரிசோதனைகள் இன்று நண்பகல் 12.00 மணிக்கு நிறைவடைந்துள்ளன. இதனால் அவர் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.


Similar posts

Comments are closed.