அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதல்களில் 2227 பேர் பலி

Written by vinni   // October 31, 2013   //

japan-scrambles-fighter-jets-to-head-off-china-planeஅமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் இதுவரை 2160 போராளிகளையும், 67 பொது மக்களையும் கொன்றுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கான் தெரிவித்துள்ளார்.
கடந்த 23-ம் தேதி வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆளில்லா விமானங்களின் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார்.

உலகின் முக்கிய மனித உரிமை அமைப்புகளும் இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றன.

எனினும், எங்களுது தாக்குதல்கள் மிகவும் துல்லியமாக திட்டமிட்டு நடத்தப்படும் தீவிரவாதிகள் ஒழிப்பு வேட்டை என்று அமெரிக்கா கூறி வருகிறது.

இந்நிலையில், இந்த வேட்டையில் 2227 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த 2002-ம் ஆண்டில் இருந்து தீவிரவாத தாக்குதல்களுக்கு 12 ஆயிரத்து 204 பேர் பலியானதாகவும், 6 ஆயிரத்து 149 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், மரண தண்டனை வழங்கப்பட்ட 13 ஆயிரத்து 223 கைதிகளில் 501 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.