டெல்லியில் கற்பழிப்பு இருமடங்கு அதிகரிப்பு

Written by vinni   // October 31, 2013   //

rapeடெல்லியில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு (2013) கற்பழிப்பு குற்றங்கள் இருமடங்காக அதிகரித்து உள்ளது. கடந்த 2012–ம் ஆண்டில் 706 கற்பழிப்பு குற்றங்கள் நடந்தது.

இந்த ஆண்டு அக்டோபர் 15–ந்தேதி வரை எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி 1330 கற்பழிப்பு குற்றங்கள் நடந்தது. அதாவது 2013–ம் ஆண்டு முடிவடைவதற்கு 2 மாதம் இருக்கும் நிலையில் 10 மாதத்தில் இரு மடங்கு கற்பழிப்பு குற்றங்கள் நடந்துள்ளது.

அதேபோல் மானபங்கம் சம்பவங்கள் 4 மடங்கு பெருகி விட்டது. 2012–ல் 727 மானபங்க வழக்குகள் பதிவானது. 2013–ல் 2,844 மானபங்க வழக்குகள் பதிவாகி உள்ளது.

‘ஈவ்டீசிங்’ சம்பவம் 2009–ல் 238–ம், இந்த ஆண்டு 793–ம் பதிவாகியுள்ளது. கடத்தல் குற்றங்கள் 2009–ல் 1655–ம், இந்த ஆண்டு 2906–ம் நடந்துள்ளது.

இதேபோல் டெல்லியில் கணவர்களால் மனைவி மார்கள் கொடுமைப்படுத்தப்பட்டது தொடர்பாக 2009–ம் ஆண்டு 1297 சம்பவங்கள் நடந்தது. 2013–ம் ஆண்டு அது 2487 ஆக அதிகரித்துள்ளது.

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக 2009–ம் ஆண்டு 6 வழக்குகள் பதிவானது. இந்த ஆண்டு 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்பாக டெல்லி மாநில அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா ஆஜராகி தாக்கல் செய்த மனுவில் இந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.