காமன்வெல்த் மாநாடு விவகாரம்: பிரதமர் மன்மோகன்சிங்குடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

Written by vinni   // October 31, 2013   //

gk vasanபிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அலுவலகத்தில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் இன்று சந்தித்து பேசினார். பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:–

இன்று பிரதமரை சந்தித்த போது, இலங்கையில் நடை பெறும் காமன்வெல்த் மாநாடு தொடர்பாக தமிழக மக்களிடம் பிரதிபலிக்கும் உணர்வுகளை எடுத்துக் கூறினேன்.

தொடர்ந்து இலங்கை ராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

எனது கருத்துக்களை பிரதமர் மிகவும் கவனமாக கேட்டு அறிந்தார். பின்னர் அவர் என்னிடம் கூறும்போது, ‘அகில இந்திய தலைவர்களின் கருத்துக்களையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் நல்ல முடிவு எடுக்கப்படும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும் விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும்’ என்றார்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.


Similar posts

Comments are closed.