ஒபாமாவை பின்னுக்கு தள்ளிய விளாடிமிர் புடின்

Written by vinni   // October 31, 2013   //

Barack Obama, Vladimir Putinஇந்தாண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதலிடம் பிடித்துள்ளார்.
உலகின் அதிகாரம் மிக்க அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் வெளியிடும்.

இந்நிலையில் இந்தாண்டுக்கான பத்திரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் டாப் 10 பட்டியல்:-

1. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின்.
2. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா.
3. சீன கம்யூனிஸ்ட் தலைவர் க்சி ஜின்பிங்.
4. கத்தோலிக்க மதகுரு போப் பிரான்சிஸ்.
5. ஜேர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல்.
6. மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ்.
7. அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர் பென் எஸ்.பெர்னகே.
8. சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ்.
9. ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் மரியோ டிராகி.
10. வால்மார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி மைக்கேல் டியூக்.

முதல் 10 இடங்களுக்குள் நுழைய முடியாத இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 11வது இடத்தில் நிற்கிறார்.

முதல் 100 வரிசையில் இடம் பெற்ற இதர இந்தியர்களாக பிரதமர் மன்மோகன் சிங்(28), முகேஷ் அம்பானி(38) தொழிலதிபர்கள் லட்சுமி மிட்டல்(51) மற்றும் சோனியா காந்தி(21) ஆகியோர் உள்ளனர்.


Similar posts

Comments are closed.