ஒரு கோடி டொலரில் உருவான உள்ளாடையுடன் அசத்தும் அழகி

Written by vinni   // October 31, 2013   //

bra_shoot_001பிரபல உள்ளாடைத் தயாரிப்பு நிறுவனமான விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் பிரா கண்காட்சியில், ஒரு கோடி அமெரிக்க டொலர் மதிப்புடைய பிராவை அணிந்து காட்சிப்படுத்த மாடல் அழகி கென்டிஸ் ஸ்வான்போல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் நியூ யார்க் நகரில் மாபெரும் உள்ளாடை தயாரிப்புக் கண்காட்சியை நடத்துகிறது.

இக்கண்காட்சியின்போது தங்கத்தில் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பல மில்லியன் டொலர் மதிப்புடைய ஃபான்டெஸி பிராக்களை அறிமுகப்படுத்துவது வழக்கம்.

இந்த பிராக்களை அணிந்து நடக்கும் வாய்ப்பை பெறுவதற்கு உலகின் முன்னிலை மாடல் அழகிகள் காத்திருப்பதுண்டு. இம்முறை தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கென்டிஸ் ஸ்வான்போல்(25) இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.

18 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த பிராவிலும் அதற்குப் பொருத்தமான இடைப் பட்டியிலும் உலகின் பல பாகங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட வைரங்கள், நீலக்கற்கள் மற்றும் 4200 இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் பிரேஸிலைச் சேர்ந்த அலெக்ஸான்ட்ரியா அம்ப்ரோஸியோ 25 லட்சம் டாலர் மதிப்புடைய பிராவை அணிந்து விளம்பரப்படுத்தினார்.

இம்முறை இந்த வாய்ப்பு கிடைத்ததால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கென்டிஸ் ஸ்வான்போல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

‘எனது உடலுக்குப் பொருத்தமான அளவில் பிராவை தயாரிப்பதற்காக எனது உடலின் மாதிரி உருவமொன்றை அவர்கள் செய்தார்கள்.

அன்றிலிருந்தே, அவர்கள் பிராவை எப்படி செய்வார்கள்? அது எப்படி காட்சியளிக்கும்? என கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டேன். இவ்வ்ளவு விலையுயர்ந்த ஆடை ஆபரணம் எதையும் நான் அணிந்ததே கிடையாது.’ எனவும் அவர் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.