இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர்

Written by vinni   // October 31, 2013   //

david kemarunஇந்தியா – இங்கிலாந்து நாடுகளுக்கிடையிலான நல்லுறவை பலப்படுத்தும் விதமாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஒருநாள் பயணமாக நவம்பர் 14ம் திகதி இந்தியா வருகிறார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் அவர் இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகள், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இதற்கு முன்னர் இங்கிலாந்தின் பிரதமராக டேவிட் கேமரூன் பதவியேற்ற 2010-ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவிற்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். பின்னர் இரண்டாம் முறையாக கடந்த பிப்ரவரி மாதம் அவர் இங்கு வந்தார்.

தற்போது மூன்றாவது முறையாக அவர் இந்தியா வருகிறார் என்பதும் 2007-ம் ஆண்டு இங்கிலாந்தின் பிரதமராக டோனி ப்ளையர் பதவி ஏற்ற போது அந்நாட்டிற்கு சென்ற பிரதமர் மன்மோகன் சிங், இங்கிலாந்து பிரதமராக டேவிட் கேமரூன் பதவியேற்ற பிறகு ஒருமுறை கூட அங்கு சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.