கிறிஸ் ஃப்ரூமிக்கு தங்க சைக்கிள் விருது

Written by vinni   // October 31, 2013   //

download (6)சிறந்த சைக்கிள் ஓட்டப் பந்தய வீரருக்கு அளிக்கப்படும் 2013-ம் ஆண்டுக்கான தங்க சைக்கிள் விருதை பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ் ஃப்ரூமி வென்றார்.
இவர், டூர் டீ பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்க சைக்கிள் விருதைப் பெறும் 2-வது பிரிட்டனைச் சேர்ந்தவர் என்ற பெருமையை ஃப்ரூமி பெற்றார். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தங்க சைக்கிள் விருதை பிரிட்டன் வீரர் சர் பிராட்லி விஜ்ஜின்ஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது 1992-ம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வருகிறது. பிரான்ஸின் “வெலோ மேகஸின்’ தங்க சைக்கிள் விருது வழங்கும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது. விருது பெறுவோரை பத்திரிகையாளர்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்வர்.

ஸ்பெயினைச் சேர்ந்த அல்பெர்டோ கன்டடர், இவ்விருதை அதிகபட்சமாக 3 முறை தொடர்ச்சியாக வென்றுள்ளார்.


Similar posts

Comments are closed.