கூட்டமைப்பு-பாரதிய ஜனதா கட்சி பேச்சு

Written by vinni   // October 31, 2013   //

r.sampanthan2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுமென அபிப்பிராய வாக்கெடுப்புகள் காட்டும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரதிய ஜனதா கட்சியுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தும் செயல்முறையை தொடங்கியுள்ளது என அக்கட்சியின் உத்தியோகத்தர்கள் கூறினர்.

பிரதானமாக தான் மருத்துவ காரணங்களினால் கடந்தவாரம் தமிழ் நாட்டுக்கு சென்ற போதிலும்இ பா.ஜ.கட்சியின் தமிழ் நாட்டு தலைவர்களுடன் பேச இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.

பா.ஜ.க வின் தமிழ் நாட்டு கிளையின் தலைவர் என்.ராதாகிருஷ்ணா மற்றும் முன்னாள்; தலைவர் எல்.கணேசன் மற்றும் மத்தியக்குழு உறுப்பினர்கள் என பலரை இரா.சம்பந்தன் சந்தித்துள்ளார்.

அதே சமயம் த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனதிராசா, எம்.எ.சுமந்திரன் ஆகியோர் அமெரிக்காவிலுள்ள தமிழ் நிறுவனங்களின் அழைப்பையேற்று செவ்வாய்க்கிழமை காலை அமெரிக்கா சென்றனர்.

இவர்கள் அமெரிக்கா இராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்திப்பார்களா என கேட்டபோது ‘எனக்கு தெரியாது’ என இரா.சம்பந்தன் கூறினார்


Similar posts

Comments are closed.