6-வது ஒரு நாள் கிரிக்கெட்: பெய்லி- வாட்சன் சதத்தால் ஆஸ்திரேலியா 350 ரன் குவிப்பு

Written by vinni   // October 30, 2013   //

India-Vs-Australia-2013-ODI-T20-Ticketsஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 6-வது ஒரு நாள் போட்டி இன்று மதியம் நாக்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் தோற்றால் இந்தியா தொடரை இழந்து விடும் என்பதால் இந்திய வீரர்கள் ஜெயிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் களம் இறங்கினர். இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

தொடக்க வீரர்களாக பின்ஞ்- ஹியூக்ஸ் களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 30 ரன்னாக இருக்கும்போது ஹியூக்ஸ் 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து 2-வது விக்கெட்டுக்கு வாட்சன் களம் இறங்கினார். 20 ரன் எடுத்திருக்கும்போது பின்ஞ் ஆட்டம் இழந்தார். அப்போது ஆஸ்திரேலிய அணி 11.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு வாட்சன்- கேப்டன் பெய்லி ஜோடி சேர்ந்தனர். இருவரும் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினர். பின்னர் அதிரடியாக விளையாடினார்கள். வாட்சன் 94 பந்தில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் 102 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலிய கேப்டன் பெய்லி, 156 ரன் குவித்து பெவிலியன் திரும்பினார். வோக்ஸ் 44 ரன் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 350 ரன் குவித்தது.

17-வது ஓவரை ரவிந்திர ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை வாட்சன் அடிக்க ரோகித் சர்மா கேட்ச் பிடித்தார். ஆனால் அது நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது வாட்சன் 25 ரன்கள் எடுத்திருந்தார். இந்த கண்டத்தில் இருந்து தப்பிய வாட்சன் சதம் எடுத்து அசத்தினார்.


Similar posts

Comments are closed.