பிரபல்யமடைந்து வரும் மலைப்பாம்பு மசாஜ்

Written by vinni   // October 30, 2013   //

snake_massage_005இந்தோனேஷியாவில் தற்போது மலைப்பாம்பு மசாஜ் செய்வது அதிகரித்துள்ளது.
சுற்றுலா தலங்களில் உடலுக்கு உற்சாகம் அளிப்பதற்காக பல வகையான மசாஜ்கள் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் சற்று வித்தியாசமான முறையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மலைப்பாம்பு மசாஜ் செய்யப்படுகிறது.

உடலில் மலைப்பாம்புகளை தவழ விட்டு, ஒரு பெண் ஒருவர் இதமாக உடலின் பாகங்களை அழுத்துவதன் மூலமாக உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதாக அந்த நிலையம் கூறுகிறது.

தற்போது இந்த மசாஜூக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பும் பெருகியுள்ளது, ஏராளமான மக்கள் வந்து குவிகின்றனர்.

இதற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.3000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.