சந்திரபாபு நாயுடுக்கு மனநலம் சரியில்லை: ரோஜா

Written by vinni   // October 30, 2013   //

rojaதெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திர பாபு நாயுடு மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார் என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அதிகார பிரதிநிதி நடிகை ரோஜா ஐதராபாத்தில் நிரூபர்களிம் பேசுகையில், இரண்டு முறை தோல்வி அடைந்து தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வர முடியாததால் அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதோ என சந்தேகமாக உள்ளது.

அவரது பேச்சு இதை உறுதிபடுத்துவது போல் உள்ளது. மேலும் அவர் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் ரகசிய கூட்டணி அமைத்துக் கொண்டு ஜெகன் மோகன் ரெட்டி மீது அவதூறு பேசுவதையே தொழிலாக கொண்டுள்ளார்.

ஐக்கிய ஆந்திராவை வலியுறுத்தி ஐதராபாத்தில் ஜெகன்மோகன் ரெட்டி நடத்திய ஐக்கிய சங்கநாதம் நிகழ்ச்சிக்கு ரூ.200 கோடி செலவிட்டதாக சந்திரபாபு நாயுடு கூறியிருப்பது கேலி கூத்து. அவர் கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆள் சேர்ப்பது போல் எல்லோரையும் நினைக்கிறார்.

மேலும் மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி மீட்பு பணிகளை விடுத்து மாநிலத்தை துண்டாடுவதில் குறியாக உள்ளது.

மாநிலத்தில் 65 சதவீதம் பேர் 80 நாட்களுக்கும் மேலாக போராடி வருவது மத்திய அரசுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை என்றும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ் நாட்டில் ஏற்பட்ட கதிதான் ஆந்திராவிலும் ஏற்பட உள்ளது எனவும் கூறியுள்ளார்.

மேலும் ஆட்சியில் இருந்த 9 ஆண்டுகளிலும், எதிர்க்கட்சியாக இருக்கும் ஒன்பது ஆண்டுகளிலும் சந்திரபாபு நாயுடு விவசாயிகளுக்காக எதுவும் செய்ததில்லை. மூன்றாவது முறையாக அவரது கட்சியை படுதோல்வி அடைய செய்ய மக்கள் காத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.