பாலியல் புகாரை வாபஸ் பெற மறுத்த ஆசிரியை தீ வைத்து எரிப்பு

Written by vinni   // October 30, 2013   //

fire-366x275பாலியல் புகாரை வாபஸ் பெற மறுத்த ஆசிரியை தீ வைத்து எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றும் 27 வயது ஆசிரியை ஒருவருக்கு பள்ளி ஆய்வாளர் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆசிரியை அளித்த புகாருக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று ஆசிரியையை புகாரை வாபஸ் பெறச் சொல்லி குற்றவாளிகள் மிரட்டியுள்ளனர். அதற்கு ஆசிரியை மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த குற்றவாளிகள் அவரை தீ வைத்து எரித்து விட்டனர்.

இதில் 90 சதவீத தீக்காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளியான பள்ளி ஆய்வாளர் தலைமறைவாகி விட்டதால் அவரைப் பொலிசார்தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும் புகாரை குறித்து நடவடிக்கை எடுக்காத உதவி கண்காணிப்பாளர் உட்பட பள்ளி ஆய்வாளர், மாவட்டக் கல்வி ஆய்வாளர் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்


Similar posts

Comments are closed.