ஓடும் ரயிலில் இருந்து குழந்தையை ஆற்றில் வீசிக் கொன்ற தந்தை

Written by vinni   // October 30, 2013   //

arrest2குடும்ப தகராறில் பெண் குழந்தையை ரயிலில் இருந்து ஆற்றில் வீசிக் கொன்ற தந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி செங்கோட்டையை அடுத்த புளியரையைச் சேர்ந்தவர் முருகன்(30). இவரது மனைவி பூமாரி. இவர்களின் குழந்தைகள் முருகேஸ்வரி(3) மாரிச்செல்வி(6 மாதம்).

கூலி வேலை செய்த முருகனுக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த சிரமப்பட்டார். கடந்த 27ம் திகதி நாகர்கோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு ரயிலில் நெல்லைக்கு புறப்பட்டனர்.

இரவு 9.30 மணிக்கு திருநெல்வேலிக்கு முன் தாமிரபரணி ஆற்றின் மீது ரயில் சென்ற போது கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற முருகன், குழந்தை மாரிச்செல்வியை தூக்கி ஆற்றில் வீசினார்.

பின்னர் குழந்தையை காணவில்லை எனக்கூறி சமாளித்தார். குழந்தையை கேட்டு, பூமாரி அழுதார். இருப்பினும் அவரை ஊருக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை தாமிரபரணி ஆற்றில் குழந்தையை வீசிய இடத்தில் இருவரும் தேடினர். தண்ணீரில் குழந்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது.

இந்நிலையில் அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் பொலிசிற்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து முருகனை பொலிசார் கைது செய்தனர்.


Similar posts

Comments are closed.