வடக்கிற்கு நேரடி உதவி வழங்க முயற்சி! அமெரிக்க தூதர்

Written by vinni   // October 30, 2013   //

US-Ambassador-Sison-போரால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு அமெரிக்காவின் உதவிகளை வடமாகாண சபைக்கு ஊடாக வழங்க முயற்சிகள் எடுக்கப்பட்டுவருவதாக இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் சிசேன் தெரிவித்துள்ளார்.இன்று காலை வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை யாழ்ப்பாணத்தில் அமெரிக்க உயர்ஸ்தானிகர் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கையின் வடமாகாண மக்களது பிரச்சனைகளை அவதானித்து கொண்டு வருவதாக அங்கு தெரிவித்த அமெரிக்க தூதுவர் மிச்செல் சிசேன் அந்த வகையில் முதல் கட்டமாக அமெரிக்கா வட மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட 5000 பொதுமக்களுக்கு உதவிகளை வடமாகாண சபைக்கு ஊடாக வழங்க முன்வந்துள்ளதாக குறிப்பிட்டார்.அத்துடன் இலங்கையின் வடமாகாணத்தில் நீண்ட காலத்துக்கு பின்னர் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உருவாக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர்; தெரிவித்துள்ளார.;


Similar posts

Comments are closed.