வடக்கு முதல்வரை கொரிய தூதுவர் சந்திப்பு

Written by vinni   // October 30, 2013   //

vikneswaran_001கொரிய தூதுவருக்கும் வடக்கு மாகாண சபை முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.

இன்று காலை 11 மணிக்கு கோயில் வீதியில் உள்ள முதலமைச்சரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கொரிய தூதுவர் உள்ளிட்ட குழுவினர் முதமைச்சரைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தியதுடன் தற்போதைய நிலவரம் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர்.

அத்துடன் கல்வி , வேலைவாய்ப்பு, புலமைப்பரிசில் மற்றும் மீன்பிடி தொடர்பிலும் பேச்சுக்கள் நடாத்தப்பட்டுள்ளது.மேலும் யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கொரிய தூதுவர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரைச் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.