பொதுநலவாய மாநாட்டை கூட்டமைப்பு புறக்கணித்தாலும் அதன் தலைவர்களை சந்திக்கும்: சுமந்திரன்

Written by vinni   // October 30, 2013   //

download (5)பொதுநலவாய நாடுகளின் அரசியல் தலைவர்களின் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தாலும், அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தும் என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளும் அரச தலைவர்களை சந்தித்து இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் அவர்களுக்கு தெளிப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.