தேர்தல் காலப்பகுதியில் படையினரின் தலையீடு மிகுதியாக இருந்தது -பொதுநலவாய நாடுகள் தேர்தல் கண்காணிப்பு குழு

Written by vinni   // October 30, 2013   //

நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் இராணுவத்தினர்தலையீடு செய்துள்ளதாக பொதுநலவாய நாடுகள் தேர்தல் கண்காணிப்புக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,

commonதேர்தல் பிரச்சார காலப்பகுதியில் படையினரின் தலையீடு வெகுவாகக் காணப்பட்டது எனவு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் தேர்தல் கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலில் இராணுவத்தின் தலையிடு பாரதூரமான நிலைமை எனவும் இது குறித்து விசாரணை செய்து எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைக் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தலின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பதில் உள்நாட்டு கண்காணிப்பாளர்களின் முக்கியத்துவம் குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

கட்சி ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கு அந்தந்த கட்சிகளே பொறுப்பு ஏற்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.


Similar posts

Comments are closed.