ஜனநாயகக் கட்சி நான்கு வருடங்களில் ஆட்சியை பிடிக்கும்!- சரத் பொன்சேகா நம்பிக்கை

Written by vinni   // October 29, 2013   //

Fonseka speaks to reporters during a news conference in Colomboஅடுத்த நான்கு வருடங்களுக்கு முன்னதாக நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற போவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேசத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமிக்கும் நிகழ்வின் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடுத்து நடைபெறவுள்ள தென், ஊவா மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியை விட அதிகளவான வாக்குகளை ஜனநாயகக் கட்சி பெறும்.

அதேவேளை கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக பாதையை நிர்மாணிக்க செலவிடப்பட்ட பணத்தை விட பத்தில் ஒரு பங்கு பணத்தை செலவிட்டு அதனை நிர்மாணித்திருக்க முடியும்.

இந்த பாதை நிர்மாணிப்பின் மூலம் கிடைத்த அதிகளவிலான கமிஷன் பணத்தை ராஜபக்‌ச குடும்பத்தினர் பெற்றுக்கொண்டுள்ளனர்.

புதிய அதிவேக பாதையின் ஒரு கிலோ மீற்றர் தூரத்தை நிர்மாணிக்க 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Similar posts

Comments are closed.