கொமன்வெல்த் மாநாட்டில் குர்ஷித் கலந்து கொள்வார்: ஆவேசமடைந்த விவசாயி தீக்குளிப்பு

Written by vinni   // October 29, 2013   //

Man-on-fireஇலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டிற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, ஆவேசமடைந்த விவசாயியொருவர் தீக்குளித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தினையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகவுண்டம்பட்டியைச் சேர்ந்த ஜெயபால் (வயது-43), இன்று காலை திடீரென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார்.

குறித்த நபர், பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவின் சார்பில் யாரும் செல்லக் கூடாது என்றும், கிருஷ்ணகிரி கேஆர் அணையில் இருந்து திண்டல் வழியாக வரும் பாசனக் கால்வாயினை அரூர் வரை நீடிக்க வேண்டுமென இரண்டு கோரிக்கைகளை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் தீக்குளித்த நபரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


Similar posts

Comments are closed.