ஸ்பெயினையும் உளவு பார்த்த அமெரிக்கா!

Written by vinni   // October 29, 2013   //

Spainபிரான்ஸ், ஜேர்மனியை தொடர்ந்து ஸ்பெயின் நாட்டையும் அமெரிக்க உளவு பார்த்தது தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் 35 நாட்டு தலைவர்களின் தொலைபேசி, செல்போன் பேச்சுகளை அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் ஒட்டு கேட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல்லின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டதற்கான ஆதாரத்தை அமெரிக்க உளவுத்துறை முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோடென் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இதனால், ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அமெரிக்காவின் ஒட்டுகேட்கும் பட்டியலில் அடுத்ததாக, ஸ்பெயின் நாட்டில் ஒரு மாதத்தில் நடந்த 6 கோடிக்கும் அதிகமான உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதற்கான ஆதாரம் வெளியாகி உள்ளது.

ஒரேநாளில் 35 லட்சம் அழைப்புகளை அதிகபட்சமாக அமெரிக்கா ஒட்டு கேட்டுள்ளதாக எல் முன்டோ என்னும் ஸ்பெயின் பத்திரிக்கை தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் தஞ்சமடைந்த எட்வர்ட் ஸ்னோடெனுடன் சேர்ந்து கிளன் கீரீன்பில்டு என்பவர் இத்தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஸ்பெயினுக்காக அமெரிக்க தூதர் ஜேம்ஸ் கோஸ்டாஸ், வெளிவிவகாரத்துறை அதிகாரிகளை சந்திப்பதற்கு முன்பாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் மரியனோ ரஜாய், தொலைபேசி ஒட்டுக் கேட்பது என்பது சட்டப்படி தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம் என்றும், இது ஸ்பெயினின் உள்நாட்டு பிரச்னை என்பதால் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியுடன் கூட்டு நடவடிக்கை எதுவுமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.