இயற்கை காட்சியே தவிர இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம்

Written by vinni   // October 29, 2013   //

minibus_002மினி பேருந்துகளில் வரையப்பட்டுள்ளது இலைகளின் அடையாள ஓவியமே தவிர அதிமுக கட்சி சின்னமான இரட்டை இலை அல்ல என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
பேரவையில் நேற்று கேள்வி & பதில் முடிந்தவுடன், சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள், முதல்வர் துவக்கி வைத்த மினி பேருந்தில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டதாக கூறியதுடன், ‘இது அரசு பேருந்தா அதிமுக பேருந்தா‘ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதில் அளித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 50 மினி பேருந்துகளில் 4 நாட்களில் மட்டும் 1,13,149 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

மக்கள் பலன் அடைகிறார்களா என்பதை பார்க்காமல் அந்த பேருந்துகளில் வரையப்பட்டுள்ள பசுமையான சூழலையும், இலையையும், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தோடு இணைத்து பேசுவது, குற்றம்சாட்டுவது தேவைதானா என்பதை திமுக உறுப்பினர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

மேலும் பேருந்துகளில் இடம் பெற்றுள்ளது கட்சி சின்னத்தை குறிப்பது அல்ல. பசுமை புரட்சியை ஏற்படுத்தும் இலைகளின் சிறப்பை நல்ல நோக்கில் சென்னை மாநகரில் மூலை முடுக்கெல்லாம் செல்லும் மினி பேருந்துகளில் இலைகளின் கலைநயத்தோடு கூடிய நான்கு இலைகள் ஓவியமாக இடம்பெற்று இருப்பது பசுமைக்கு வித்திடும் என்றும் இது இலைகளின் அடையாளமான ஓவியமே தவிர கட்சி சின்னம் அல்ல எனவும் கூறியுள்ளார்.

மக்கள் கண்களுக்கு குளிர்ச்சியாகவும், மனங்களுக்கு இதமாகவும் சிற்றுந்துகள் விளங்க வேண்டும் என்பதற்காக பசுமையின் விளக்கமாக சிற்றுந்துகளில் இலைகள் வரையப்பட்டுள்ளது.

மேலும் இரட்டை இலை சின்னத்தை பேருந்துகளில் வரைந்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு கிடையாது என்று பதில் அளித்துள்ளார்.


Similar posts

Comments are closed.