தீபாவளி வசூலில் கலக்கும் கரீனா கம்பி மத்தாப்பு

Written by vinni   // October 29, 2013   //

karஉத்திரபிரதேச மாநிலத்தில் கரீனா கபூர் புகைப்படம் போட்ட பட்டாசுகள் வசூலில் சாதனை படைத்து வருகின்றன.

பட்டாசுகளில் நடிகைகளின் புகைப்படங்கள் வருவது ஒன்றும் புதிதல்ல. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் கரீனா கபூரின் புகைப்படங்கள் உள்ள பட்டாசுகள் தான் அதிக அளவில் விற்பனையாகின்றன.

இதுகுறித்து ஐஸ்பாகில் உள்ள ஆசாத் பயர்ஒர்க்ஸைச் சேர்ந்த தில்ஷர் ஆசாத் கூறுகையில், இந்த ஆண்டு பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு பிடித்த நடிகையாக கரீனா கபூர் உள்ளார். அவரின் புகைப்படம் தான் பெரும்பாலான பட்டாசுகளில் உள்ளது.

அவரை அடுத்து அசின், கத்ரினா கைப், ஐஸ்வர்யாவின் புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ஹாலிவுட்டில் ஹாரி பாட்டர், டைட்டானிக் படங்களின் ஸ்டில்கள் மற்றும் நடிகர் ப்ரூஸ் லீயின் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

குழந்தைகளை கவர பிரபல கார்டூன் கதாபாத்திரங்கள், டபுள்யூடபுள்யூஎப்-இல் வரும் வீரர்களின் புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பட்டாசுகளில் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், டோணியின் புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் சென்னை எக்ஸ்பிரஸ், தபாங் மற்றும் கிராண்ட் மஸ்தி ஆகிய இந்தி படங்களின் ஸ்டில்களும் பட்டாசு டப்பாக்களில் பயன்படுத்தப்படுகிறது. இதில் சல்மானின் தபாங் பட போஸ் படங்கள் உள்ள பட்டாசுகள் அதிக அளவில் விற்பனையாகிறது.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கௌன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரை கௌரவிக்கும் வகையில் குரோர்பதி பட்டாசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.