லிபியாவில் சிர்தே விமான நிலையத்துக்குள் துப்பாக்கி முனையில் ரூ.325 கோடி கொள்ளை

Written by vinni   // October 29, 2013   //

Libyan-airportலிபியாவில் சிர்தே விமான நிலையத்துக்கு லிபியன் தேசிய வங்கியை சேர்ந்த ஒரு வேன் வந்து கொண்டிருந்தது. அதில் லிபியா மற்றும் வெளிநாடுகளின் பணம் எடுத்து வரப்பட்டது.

அந்த வேன் சிர்தே விமான நிலையத்துக்குள் நுழைந்த போது துப்பாக்கி முனையில் 10 பேர் கும்பல் அதை வழி மறித்து கடத்தியது.

பின்னர் அதில் கொண்டு வரப்பட்ட ரூ.325 கோடியை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

லிபியாவில் சர்வாதிகாரி மும்மர் கடாபியின் ஆட்சி அகற்றப்பட்டு மாற்று ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு இன்னும் ஸ்திரதன்மை ஏற்படவில்லை.

நாடு முழுவதும் புதிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் கொள்ளையர்கள் மற்றும் ரவுடிகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு இது போன்று கொலை, கொள்ளைகள் சாதாரணமாக நடக்கின்றன.


Similar posts

Comments are closed.