வடக்கு ஐரோப்பாவில் புயல் தாக்கியதில் 13 பேர் பலி

Written by vinni   // October 29, 2013   //

dgStorm1இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் புயல் தாக்கியதில் 13 பேர் பலியாகினர்.

வடக்கு ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் நேற்று அதிகாலை கடும் புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 99 மைல் (160 கி.மீட்டர்) வேகத்தில் பலத்த காற்று வீசியது.

இந்த புயல் தாக்குதலில் இங்கிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடலில் ராட்சத அலைகள் உருவாயின. அவை சுழன்று வந்து கரையை தாக்கின.

காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இங்கிலாந்தில் கடும் சேதம் உருவானது. லண்டன், வேல்ஸ், கென்ட் நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ரோடுகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

அவை ரோட்டில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விழுந்து நசுக்கின. அதில் ஏராளமான கார்கள் சேதம் அடைந்தன.

புயல் காரணமாக இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. இதனால் சுமார் 6 லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவித்தனர்.

மழை வெள்ளம் காரணமாக ரோடுகள் துண்டிக்கப்பட்டதால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ரெயில் போக்குவரத்தும் முடங்கியது. எனவே லட்சக்கணக்கானவர்கள் பயணம் செய்ய முடியாமல் தவித்தனர்.

லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 130 விமானங்களின் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இங்கிலாந்தை தாக்கிய புயல் வடக்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மன், நெதர்லாந்து, டென்மார்க் நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தும், வெள்ளத்தில் சிக்கியும் 13 பேர் பலியாகினர்.

அவர்களில், இங்கிலாந்தில் 5 பேரும், ஜெர்மனியில் 6 பேரும், நெதர்லாந்தில் தலா ஒருவரும் அடங்குவர்.


Similar posts

Comments are closed.